Thursday, September 24, 2009
புதிய பத்து...
அஸ்ஸலாமு அழைக்கும்...
எனதருமை சகோதர சகோதரிகளுக்கு.. உங்கள் நாகூர் சாகிபின் பணிவான சலாம்.
என்னடா ரொம்ப நாலா நம்ம வெப்பில் புதிய பகுதி வரலையே என்று நீங்க பீல் பண்றது எங்களுக்கு நல்லாவே தெரியும்.. நாங்க மட்டுமே திங் பண்ணி எழுதுறதை விட நம்ம சமுதாயம் / நம்ம சமுதாய மக்கள் திங் பண்றதே சரி என எங்கள் மூத்த உறுப்பினர் கொடுத்த அடிப்படையில் , நமது சமுதாயத்தில் அதிக விழிப்புணர்வு உள்ள பத்து பேரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.. நமது வெப் உறுப்பினர்கள் பல சந்தர்பங்களில் அவர்களை சந்தித்து பல தரப்பட்ட கருத்துக்களை சேகரித்தோம்..
உண்மைய சொல்ல போனால் - நமது எஜமானின் பேரபிள்ளைகள் அனைவரும் அல்லாஹ்வின் ஆசிர்வாதம் பெற்றவர்கள்.. கொள்ளை அறிவு கொட்டி கிடைக்கறது.. சந்தர்ப்பம் சூழ்நிலை அவர்களின் அறிவு பார்வை உலகிற்கு வெளி வரவில்லை.. இன்சா அல்லாஹ் விரைவில் இவர்களின் அறிவு கடலை உலகம் அறியும்..
நாம் சந்தித்த பத்து நபரும் , நமது நாகூர் தர்கா முன்னேற்ற சாலையில் ஒரு சாலை வழி விசாரிப்பு கல் அக சம்மதித்தார்கள் ( பெருந்தன்மை ).. எங்களை பொருத்தவரை உண்மை சாலையே இவர்கள் தான்.. இவர்களின் எங்களின் இந்த முயற்சிக்கு முன்னோடியும் இருக்கிறார்கள்.. எங்களின் இன்ச்பிறேசனும் இவர்களே...
சரி சரி.. பிளேடு போதும்.. மேட்டருக்கு வரேன் .. நமது தலைவர்கள் இந்த பத்து நபரும் சமுதாய முன்னேற்றத்தில் தன்னை எடுபடுத்தியவர்கள் / சில சமயம் ஜெயித்தவர்கள் / பல சமயம் தோல்வியை சந்திக்க நினைத்தவர்கள் ( தோற்றவர்கள் அல்ல )... எங்கள் பத்து தலைவர்களும் பத்து கட்டுரைகள் எழுத உள்ளனர்.. அவர்களின் பத்துக்கு பத்து கட்டுரை உங்கள் பார்வைக்கு..
அவர்களின் சமுதாய அக்கறை கட்டுரைகள் இதோ..
பங்கு பணம் உயர வழி என்ன... என் மூளைக்கு எட்டினது...
தர்காவின் சுகாதாரம் - உங்கள் கையில்..
விளம்பரம் - விவாதிக்க...
தர்கா புத்தகம்.... கூக்ளி புக். - எழுதுங்கள் இளைஜர்களே..
தர்காவிடம் சாகிப்மார்கள் எதிர்பாப்பது - தர்கா எதிர்பார்ப்பது..
கடைகள் - வாடகைகள் - களவாணிகள்.. ( தலைப்பே கண்ணை கட்டுதே )
சில்லடி தர்கா , வாஞ்சூர் தர்கா , மேல வாஞ்சூர் தர்கா , உள்ளூர் ஜியாரத்..
அரசியல் - அநாகரிகம் - தர்கா ( சவுக்கடி படலம் )
கல்வி.. கனவு ... வங்கி... விழிப்புணர்வு...
அப்துல் கலாம் கனவு இந்தியா.. நாகூர் சாகிபின் கனவு நாகூர் தர்கா..
மேல குறிப்பிட்ட ஒவ்வொரு தலைப்பிலும் மாதம் இரு படைப்பு உங்கள் பார்வைக்கு வைக்கப்படும்..
நமது வெப் சிறப்படைய / தனது பொன்னான நேரத்தை ஒதுக்கியா அனைத்து நாள் உள்ளங்களும் நீடுடி வாழ வாழ்த்த நினைத்து வணங்குகிறோம்..
வஸ்ஸலாம்
நாகூர் சாஹிப்.
Subscribe to:
Posts (Atom)